Wednesday, 4 January 2017

வீடு, இடம் வாங்கப் போறீங்களா?, ru you going to buy a new house.

வீடு, இடம் வாங்கப் போறீங்களா?

🏠 சொந்தமாக இடம், வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா? அதிலும், குறிப்பாக சமீபத்தில் பிரபலமாகி வரும் விமானநிலையம், எக்ஸ்பிரஸ்வே, தேசியநெடுஞ்சாலை, மெட்ரோ ரெயில்நிலையம் ஆகியவற்றின் அருகில் இடம், வாங்கப் போறீங்களா?. அங்கு விரைவில் மத்திய, மாநில அரசின் அலுவலகங்கள் வரப் போகும் இடம் அருகே நிலம், இடம் வாங்கிப்போட்டால், எதிர்காலத்தில் அதன் மதிப்பு இருமடங்கு உயரும் என நினைத்துக்கொண்டு இருக்கிறீர்களா?.

🏠 இப்படி நினைத்துக் கொண்டு இருப்பவர்களின் எண்ணத்துக்கு வேட்டு வைக்கும் வகையில், மத்திய அரசு அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் ஒரு புதிய திட்டத்தையும் வரியையும் கொண்டு வருகிறது.

🏠 அதாவது, இதுபோல் விரைவாக பிரபலமாகி, வளர்ச்சி அடைந்துவரும் இடங்களுக்கு அருகே இடம், வீடு வாங்கினால், அதற்கு முன்னேற்ற வரி (பெட்டர்மென்ட் டேக்ஸ்) என ஒன்றை வசூலிக்கப் போகிறீர்கள்.

🏠 இதுபோன்ற வரிகள் பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் வசூலிக்கப்பட்டு, அந்த தொகை வளர்ச்சி உள்கட்டமைப்புக்காக செலவு செய்யப்படுகிறது. அதுபோல் நம்நாட்டிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசுமுடிவு செய்துள்ளது. இதுகுறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகி, அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வரலாம் எனத் தெரிகிறது.

🏠 அந்தந்த பகுதிக்கான வரிகள் குறித்து ஆலோசித்து வருகிறது. அந்த வரியை பத்திரபதிவின்போதே சேர்த்து வசூலிக்கவும் ஆலோசித்து வருகிறது.

🏠 இந்த பெட்டர்மென்ட் டேக்ஸ் என்பதன் முக்கிய நோக்கமே வளர்ச்சி அடைந்த பகுதிகளில் குடியேறும் மக்கள், இடம் வாங்குபவர்கள் ஆகியோரிடம் இருந்து கூடுதலாக வரிவசூலித்து, அந்த வரியை அந்த பகுதியின் மேம்பாட்டுக்காக செலவு செய்வதாகும்.

🏠 ஆக அடுத்த ஆண்டுமுதல் இடம், வீடு வாங்குபவர்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படுவது ஏறக்குறையாக உறுதியாகி உள்ளது.

துணிகள் கிழிவது போல் கனவு கண்டால் - ஜோதிடர் பதில்கள்!.. if you get dreems like tearing ur cloths

  கனவுகள் பல வகைப்படும். நாம் காணும் கனவுகளுக்கு பலன்களும் உண்டு. நாம் காணும் கனவுகளின் பலன்கள் என்னவாக இருக்கும் என்று பலரும் யோசிப்பது உண்டு. கனவில் துணி வந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.

✥ புது துணி அணிவது போல கனவு கண்டால் சிக்கலான அறிகுறியாகும். இதனால் எதிர்பாராத நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புகள் உண்டு. வீண் சண்டைக்கு யாராவது வருவார்கள்.

✥ துணியை கிழிப்பது போல கனவு கண்டால், உறவில் விரிசல் உண்டாகும். நம்பிக்கையானவர்களால் பிரச்சனை ஏற்படும். பிறருக்கு நன்மை செய்தாலும் அவர்கள் உங்களை குறைதான் சொல்வார்கள். வேலையில் சில மாற்றங்கள் ஏற்படும்.

✥ கிழிந்த துணியை அணிந்து இருப்பது போல கனவு கண்டால் பணவரவு உங்களிடம் தாராளமாக இருக்கும். ஒரு காரியத்தில் தோல்வி அடைந்தாலும், விடா முயற்சியுடன் அக்காரியத்தை செய்து வெற்றி பெறுவீர்கள்.

✥ கிழிந்த துணியை தைப்பது போல கனவு கண்டால் புகழ், செல்வம் உண்டாகும். மனத்திற்கினிய செய்திகள் வரும். பணம் புழக்கம் அதிகரிக்கும். நினைத்த காரியத்தை சாதிப்பீர்கள்.

✥ கிழிந்த துணியை உங்கள் குடும்பத்தினர் உடுத்தியிருப்பது போல கனவு கண்டால் ஏதாவது ஒரு ஆபத்து நேரிடும். இறைவனின் ஆசிர்வாதத்தாலும் உங்களின புத்திசாலிதனமான திறமையாலும் பெரிய ஆபத்தில் இருந்து தப்பி வருவீர்கள். குடும்பத்தில் நிம்மதியின்மை இருக்கும்.

ஆரத்தி எடுக்கப்படுவது ஏன்? ,why do we take arathi.

ஆரத்தி எடுக்கப்படுவது ஏன்?
🔯 தமிழர்களின் கலாச்சாரங்களில் ஒன்று ஆரத்தி எடுப்பது. ஆரத்தி எடுப்பது இந்துக்களின் சாங்கிய சம்பிரதாயங்களில் காணலாம். ஆரத்தி கண் திருஷ்டியை போக்க எடுக்கப்படுகிறது என நம் முன்னோர்கள் கூறுவார்கள்.

🔯 தூரத்து பயணம் முடித்து வருபவர்களுக்கும், புதிதாய் திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்கள் மற்றும் மகப்பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண் ஆகியோருக்கு ஆரத்தி எடுக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.

🔯 இந்த சம்பிரதாயத்தின் முக்கிய நோக்கமே, யாருக்கு ஆரத்தி எடுக்கிறோமோ அவருக்கு லட்சுமி, சரஸ்வதி ஆகிய இரண்டு தெய்வங்களின் அருள் கிடைக்க வேண்டும் என்பதே.

🔯 ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில், தண்ணீரில் மஞ்சள் (லட்சுமி) சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு (சரஸ்வதி) சேர்த்து கலக்க வேண்டும். மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீர் சிவப்பு நிறம் வரும். இதை ஒரு தட்டில் எடுத்து அதற்கு தீச்சுடர் ஏற்றி சம்பந்தப்பட்ட நபரின் உடலை 3 முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூறுகின்றோம்.

🔯 மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும் திறன் உண்டு. இது உடலிலுள்ள விஷ அணுக்களை அழிக்கிறது. ஆரத்தியை சுற்றிய பின்னர் அந்த ஆரத்தி நீரை வடக்கு பக்கமாகக் கொட்டிவிடவேண்டும். யார் காலிலும் படாதபடி ஏதேனும் செடிக்கு ஊற்றினாலும் சரிதான்.

உங்கள் கனவில் அடிக்கடி பாம்பு வருகிறதா?,did u get snake in dreems

 தூங்கும் போது கனவுகள் வருவது எல்லோருக்கும் ஏற்படக்கூடிய தனிப்பட்ட விஷயமாகும். பற்பல நிகழ்வுகள் நம் கனவில் தோன்றும். அதிலும் பயமுறுத்தும் கனவுகளும் சில உண்டு. பாம்புகள் நம் கனவில் வந்தால் என்ன அர்த்தம் என்று பார்ப்போம்.
🐍 பாம்பு கடித்தது போல் கனவு கண்டால் தனலாபம் உண்டாகும்.
🐍 பாம்பு விரட்டுவது போல் கனவு கண்டால் வறுமை உண்டாகும்.
🐍 இரட்டைப் பாம்புகளை கனவில் கண்டால் நன்மை ஏற்படும்.
🐍 நல்ல பாம்பைக் கனவில் கண்டால் விரோதிகளால் பிரச்சனைகள் உண்டாகும்.
🐍 பாம்பை கொல்வது போல் கனவு கண்டால் விரோதிகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கும்.
🐍 பாம்பு கழுத்தில் மாலையாக விழுவது போல் கனவு கண்டால் பணக்கார யோகம் உண்டாகும்.
🐍 பாம்பு காலைச்சுற்றி பின்னிக்கொள்வது போல் கனவு கண்டால் சனி பிடிக்கப் போகிறது என்று அர்த்தம்.
🐍 பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால் சனி நீங்கிவிட்டது என்று அர்த்தம்.
🐍 பாம்பு புல்லில் உள்ளது போல் கனவு வந்தால் நம்ப முடியாத ஒருவரால் நீங்கள் ஏமாற்றப்படுவர்.

இராசிக்கான அதிஷ்ட மாதங்கள்!,lucky months for ur symblos


இராசிக்கான அதிஷ்ட மாதங்கள்!
வருடத்தின் எல்லா நாட்களுமே நமக்கு அதிர்ஷ்டத்தைத் தருவதில்லை. ஒவ்வொரு இராசிக்காரர்களுக்கும் சில குறிப்பிட்ட நாள்களில் தான் அதிர்ஷ்டம் உண்டாகும்.

2017 ஆம் ஆண்டு நீங்கள் எந்தெந்த மாதங்களில் துணிந்து முதலீடுகளை போடலாம், கல்வி, பொருளாதாரம், ஆரோக்கியம் ஆகியவை நன்றாக இருக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?

அதன் அடிப்படையில் 2017 ஆம் ஆண்டு உங்கள் இராசிக்கு ஏற்ற அதிர்ஷ்ட மாதங்கள் பற்றிய ஒரு தகவல்கள்.,

♈ மேஷம் - ஜனவரி, பிப்ரவரி, ஜூன், ஜூலை, செப்டம்பர்

♉ ரிஷபம் - மார்ச், ஏப்ரல், மே, ஜூலை

♊ மிதுனம் - பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், ஜூலை, அக்டோபர், நவம்பர்

♋ கடகம் - ஜனவரி, ஏப்ரல், மே, ஜூலை, செப்டம்பர், டிசம்பர்

♌ சிம்மம் - ஜனவரி, மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட்

♍ கன்னி - பிப்ரவரி, ஜூன், ஜூலை, அக்டோபர், நவம்பர்

♎ துலாம் - ஜனவரி, டிசம்பர், ஏப்ரல், மே, ஜூன்

♏ விருச்சிகம் - ஜனவரி, மார்ச், செப்டம்பர்

♐ தனுசு - மார்ச், மே, ஜூன், செப்டம்பர், அக்டோபர், டிசம்பர்

♑ மகரம் - ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜூன்

♒ கும்பம் - ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜூன்

♓ மீனம் - ஏப்ரல், மே, செப்டம்பர்

🔯 இது பொதுவான தகவல் மட்டுமே, உங்களின் தனிப்பட்ட இராசிக்கு உங்கள் ஜோதிடரின் ஆலோசனைப்படி நடந்து கொள்வது உத்தமம்.