வீடு, இடம் வாங்கப் போறீங்களா?

சொந்தமாக இடம், வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா? அதிலும், குறிப்பாக சமீபத்தில் பிரபலமாகி வரும் விமானநிலையம், எக்ஸ்பிரஸ்வே, தேசியநெடுஞ்சாலை, மெட்ரோ ரெயில்நிலையம் ஆகியவற்றின் அருகில் இடம், வாங்கப் போறீங்களா?. அங்கு விரைவில் மத்திய, மாநில அரசின் அலுவலகங்கள் வரப் போகும் இடம் அருகே நிலம், இடம் வாங்கிப்போட்டால், எதிர்காலத்தில் அதன் மதிப்பு இருமடங்கு உயரும் என நினைத்துக்கொண்டு இருக்கிறீர்களா?.

இப்படி நினைத்துக் கொண்டு இருப்பவர்களின் எண்ணத்துக்கு வேட்டு வைக்கும் வகையில், மத்திய அரசு அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் ஒரு புதிய திட்டத்தையும் வரியையும் கொண்டு வருகிறது.

அதாவது, இதுபோல் விரைவாக பிரபலமாகி, வளர்ச்சி அடைந்துவரும் இடங்களுக்கு அருகே இடம், வீடு வாங்கினால், அதற்கு முன்னேற்ற வரி (பெட்டர்மென்ட் டேக்ஸ்) என ஒன்றை வசூலிக்கப் போகிறீர்கள்.

இதுபோன்ற வரிகள் பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் வசூலிக்கப்பட்டு, அந்த தொகை வளர்ச்சி உள்கட்டமைப்புக்காக செலவு செய்யப்படுகிறது. அதுபோல் நம்நாட்டிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசுமுடிவு செய்துள்ளது. இதுகுறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகி, அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வரலாம் எனத் தெரிகிறது.

அந்தந்த பகுதிக்கான வரிகள் குறித்து ஆலோசித்து வருகிறது. அந்த வரியை பத்திரபதிவின்போதே சேர்த்து வசூலிக்கவும் ஆலோசித்து வருகிறது.

இந்த பெட்டர்மென்ட் டேக்ஸ் என்பதன் முக்கிய நோக்கமே வளர்ச்சி அடைந்த பகுதிகளில் குடியேறும் மக்கள், இடம் வாங்குபவர்கள் ஆகியோரிடம் இருந்து கூடுதலாக வரிவசூலித்து, அந்த வரியை அந்த பகுதியின் மேம்பாட்டுக்காக செலவு செய்வதாகும்.

ஆக அடுத்த ஆண்டுமுதல் இடம், வீடு வாங்குபவர்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படுவது ஏறக்குறையாக உறுதியாகி உள்ளது.
No comments:
Post a Comment