கனவுகள் பல வகைப்படும். நாம் காணும் கனவுகளுக்கு பலன்களும் உண்டு. நாம் காணும் கனவுகளின் பலன்கள் என்னவாக இருக்கும் என்று பலரும் யோசிப்பது உண்டு. கனவில் துணி வந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.
✥ புது துணி அணிவது போல கனவு கண்டால் சிக்கலான அறிகுறியாகும். இதனால் எதிர்பாராத நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புகள் உண்டு. வீண் சண்டைக்கு யாராவது வருவார்கள்.
✥ துணியை கிழிப்பது போல கனவு கண்டால், உறவில் விரிசல் உண்டாகும். நம்பிக்கையானவர்களால் பிரச்சனை ஏற்படும். பிறருக்கு நன்மை செய்தாலும் அவர்கள் உங்களை குறைதான் சொல்வார்கள். வேலையில் சில மாற்றங்கள் ஏற்படும்.
✥ கிழிந்த துணியை அணிந்து இருப்பது போல கனவு கண்டால் பணவரவு உங்களிடம் தாராளமாக இருக்கும். ஒரு காரியத்தில் தோல்வி அடைந்தாலும், விடா முயற்சியுடன் அக்காரியத்தை செய்து வெற்றி பெறுவீர்கள்.
✥ கிழிந்த துணியை தைப்பது போல கனவு கண்டால் புகழ், செல்வம் உண்டாகும். மனத்திற்கினிய செய்திகள் வரும். பணம் புழக்கம் அதிகரிக்கும். நினைத்த காரியத்தை சாதிப்பீர்கள்.
✥ கிழிந்த துணியை உங்கள் குடும்பத்தினர் உடுத்தியிருப்பது போல கனவு கண்டால் ஏதாவது ஒரு ஆபத்து நேரிடும். இறைவனின் ஆசிர்வாதத்தாலும் உங்களின புத்திசாலிதனமான திறமையாலும் பெரிய ஆபத்தில் இருந்து தப்பி வருவீர்கள். குடும்பத்தில் நிம்மதியின்மை இருக்கும்.
No comments:
Post a Comment