ஆரத்தி எடுக்கப்படுவது ஏன்?

🔯 தமிழர்களின் கலாச்சாரங்களில் ஒன்று ஆரத்தி எடுப்பது. ஆரத்தி எடுப்பது இந்துக்களின் சாங்கிய சம்பிரதாயங்களில் காணலாம். ஆரத்தி கண் திருஷ்டியை போக்க எடுக்கப்படுகிறது என நம் முன்னோர்கள் கூறுவார்கள்.
🔯 தூரத்து பயணம் முடித்து வருபவர்களுக்கும், புதிதாய் திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்கள் மற்றும் மகப்பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண் ஆகியோருக்கு ஆரத்தி எடுக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.
🔯 இந்த சம்பிரதாயத்தின் முக்கிய நோக்கமே, யாருக்கு ஆரத்தி எடுக்கிறோமோ அவருக்கு லட்சுமி, சரஸ்வதி ஆகிய இரண்டு தெய்வங்களின் அருள் கிடைக்க வேண்டும் என்பதே.
🔯 ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில், தண்ணீரில் மஞ்சள் (லட்சுமி) சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு (சரஸ்வதி) சேர்த்து கலக்க வேண்டும். மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீர் சிவப்பு நிறம் வரும். இதை ஒரு தட்டில் எடுத்து அதற்கு தீச்சுடர் ஏற்றி சம்பந்தப்பட்ட நபரின் உடலை 3 முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூறுகின்றோம்.
🔯 மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும் திறன் உண்டு. இது உடலிலுள்ள விஷ அணுக்களை அழிக்கிறது. ஆரத்தியை சுற்றிய பின்னர் அந்த ஆரத்தி நீரை வடக்கு பக்கமாகக் கொட்டிவிடவேண்டும். யார் காலிலும் படாதபடி ஏதேனும் செடிக்கு ஊற்றினாலும் சரிதான்.
No comments:
Post a Comment