தூங்கும் போது கனவுகள் வருவது எல்லோருக்கும் ஏற்படக்கூடிய தனிப்பட்ட விஷயமாகும். பற்பல நிகழ்வுகள் நம் கனவில் தோன்றும். அதிலும் பயமுறுத்தும் கனவுகளும் சில உண்டு. பாம்புகள் நம் கனவில் வந்தால் என்ன அர்த்தம் என்று பார்ப்போம்.

பாம்பு கடித்தது போல் கனவு கண்டால் தனலாபம் உண்டாகும்.

பாம்பு விரட்டுவது போல் கனவு கண்டால் வறுமை உண்டாகும்.

இரட்டைப் பாம்புகளை கனவில் கண்டால் நன்மை ஏற்படும்.

நல்ல பாம்பைக் கனவில் கண்டால் விரோதிகளால் பிரச்சனைகள் உண்டாகும்.

பாம்பை கொல்வது போல் கனவு கண்டால் விரோதிகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கும்.

பாம்பு கழுத்தில் மாலையாக விழுவது போல் கனவு கண்டால் பணக்கார யோகம் உண்டாகும்.

பாம்பு காலைச்சுற்றி பின்னிக்கொள்வது போல் கனவு கண்டால் சனி பிடிக்கப் போகிறது என்று அர்த்தம்.

பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால் சனி நீங்கிவிட்டது என்று அர்த்தம்.

பாம்பு புல்லில் உள்ளது போல் கனவு வந்தால் நம்ப முடியாத ஒருவரால் நீங்கள் ஏமாற்றப்படுவர்.
No comments:
Post a Comment